கடன் வாங்குவதில் தென் மாநிலங்களில் முதலிடத்தில் தமிழகம் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் குறிப்பாக தென்மாநிலங்களில் அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் மட்டும் தமிழகம் ரூபாய் 50,000 கோடி கடன் வாங்கியுள்ளது.
2019ஏப்ரல் to செப்டம்பர் வரையில் வாங்கிய ரூபாய் 24 ஆயிரத்து 190 கோடி கடன் உடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு வாங்கிய கடன் 107 சதவீதம் உயர்வாகும். இதனால் தமிழகத்தில் வாழும் ஒவ்வொருவரின் தலையிலும் கடன்சுமை மேலும் அதிகரித்துள்ளது.