காபி தூளின் ஒரு சில பயன்பாடுகள் குறித்த இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
காபி தூள் மற்றும் எலுமிச்சைச் சாறு இரண்டையும் நன்கு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.
காபி தூளில் தேன் அல்லது சர்க்கரை கலந்து முகத்தில் தேய்க்க முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் இறந்த செல்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு, முக பிரச்சனைகளில் இருந்து தீர்வு தரும்.
ஆலிவ் எண்ணெயுடன் காபி தூள் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமம் மென்மையாக இருக்கும்.