கொலை வழக்கில் இருந்து தப்பிக்க மற்றொரு கொலை செய்த குற்றவாளி மனைவியால் கைது செய்யப்பட்டுள்ளார்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகாரை சேர்ந்த குமார் என்பவர் பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜாமீனில் கடந்த வாரம் வெளியில் வந்த குமார் கொலை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக திட்டம் போட தொடங்கி உள்ளார். அதனால் குமார் அவருக்குத் தெரிந்த நண்பரை பணம் கொடுப்பதாக கூறி தனது ஆடைகளை போட சொல்லியுள்ளார்.
நண்பரும் அதேபோன்று செய்ய அவரை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற குமார் அங்கு இருந்த சிலரது உதவியுடன் பணம் கொடுப்பதாக அழைத்த நண்பரை கொலை செய்தார் அதன்பிறகு அவரது முகத்தைப் சிதைத்து தனது ஆதார் அட்டையை அவரது பாக்கெட்டில் வைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இந்நிலையில் காட்டுப்பகுதியில் சடலத்தை பார்த்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் சடலத்தில் இருந்த ஆதார் அட்டையை வைத்து ஜாமினில் வெளியே வந்த குமார் என்று உறுதி செய்தனர்.
ஆனாலும் காவல்துறையினருக்கு சிறிய சந்தேகம் இருந்ததால் குமாரின் மனைவியை விசாரித்தனர். அப்போது அவர் கொடுத்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டபோது குமார் உயிருடன் இருப்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த குமாரை மனைவி கொடுத்த தகவலை வைத்து காவல்துறையினர் விரைந்து பிடித்தனர். ஒரு கொலை வழக்கில் இருந்து தப்பிக்க முயற்சித்த குமார் தற்போது இரண்டு கொலை வழக்குக்காக சிறையில் அடைக்கப்பட்டார்.