Categories
தேசிய செய்திகள்

நடுவானில் பிறந்த குழந்தை…. விமான நிறுவனம் கொடுத்த பரிசு…!!

இன்டிகோ விமானத்தில் நடுவானில் பிறந்த குழந்தைக்கு தனது வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்வதற்கான சலுகை வழங்கப்பட்டது.

இண்டிகோ வின் 6E 122 விமானம் டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்டது. அந்த விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பயணம் செய்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென விமானத்தில் வைத்து பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து பணிப்பெண்களின் உதவியுடன் அந்த பெண்ணிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து விமான நிறுவனம் கூறுகையில் “6E 122 டெல்லி – பெங்களூர் வழியில் சென்ற விமானத்தில் பயணித்த கர்ப்பிணிப் பெண்ணிற்கு விமானத்தில் வைத்து ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் தற்போது ஆரோக்கியமாக உள்ளனர். தக்க சமயத்தில் அவருக்கு உதவிய ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். விமானத்தில் பிறந்த அந்த குழந்தை தனது வாழ்நாள் முழுவதும் எங்கள் நிறுவனமான இன்டிகோ விமானத்தில் கட்டணமின்றி இலவசமாக பயணிப்பதற்கான சலுகை அளிக்கப்படும்” என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |