இன்றைய ஐ.பி.எல் போட்டியில் டேவிட் வார்னர் புதிய உலக சாதனையை படைத்தது அசத்தியுள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் சன்ரைசர்ஸ் VS ஹைதராபாத் சன்ரைசஸ் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியில் முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளாசித் தள்ளியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்த சன் ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் – பர்ஸ்டோவ் அதிரடி காட்டினார்.
100 ரன்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பர்ஸ்டோவ் எதிர்பாராதவிதமாக 97 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் டேவிட் வார்னர் 52 ரன்களுக்கு ஆட்டம் இழந்தாலும் இந்த போட்டியில் ஒரு புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இது அவர் அடிக்கும் 50வது அரை சதம் ஆகும்.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஒரு வீரரும் 50 அரைசதம் சதம் அடிக்காத நிலையில் டேவிட் வார்னர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் ஒரே அணியுடன் அதிக அரை சதம் அடித்த வீரர்கள் வரிசையிலும் இவர் தான் முதலிடம் வகிக்கின்றார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக டேவிட் வார்னர் அடிக்கும் 9 அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது.