தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கின்றது, இதனை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் வியூகங்களை வகுத்து வருகின்றன. ஏற்கனவே கொரோனா பேரிடர் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் அரசியல் காட்சிகள் ஊரடங்கு காலத்திலும் தேர்தலுக்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக திமுக உறுப்பினர் சேர்க்கை இணையத்தில் நடத்தியது. எல்லோரும் நம்முடன் என்ற வாசகத்துடன் திமுக முன்னெடுத்துள்ள இணைய வழி உறுப்பினர் பதிவு தற்போது 10 லட்சத்தை கடந்துள்ளது. இதனை அக்கட்சி உறுதிப்படுத்தியுள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து #DMK_1MillionOnline என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது.
#எல்லோரும்நம்முடன் முன்னெடுப்பு 10,00,000 புதிய உறுப்பினர்கள் என்ற இலக்கை எட்டியுள்ளது. இணைந்தவர்களில் 53% பேர் இளைஞர்கள்!
கொடிய, மக்கள் விரோத ஆட்சியை அகற்றி, 2021ல் திமுக ஆட்சி உதித்திட தமிழகமே அலை அலையாய் ஆர்ப்பரிக்கிறது. #DMK_1MillionOnline புதிய விடியலுக்கான துவக்கம்! pic.twitter.com/b8gRjRXkbm
— M.K.Stalin (@mkstalin) October 8, 2020