சுஜாதா பயோடெக் நிறுவனரும், மேலாண் இயக்குநரும், நிவாரன் 90 உரிமையாளருமான சி.கே. ராஜ்குமார் உடல் நலக்குறைவு காரணமாக (அக்.7) சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 68.
உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்த சுஜாதா பயோடெக் நிறுவனர் சி.கே.ராஜ்குமாருக்கு மனைவி, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அவரின் இறுதிச்சடங்கு வியாழக்கிழமை (அக். 8) காலை 9 மணிக்கு நடைபெற்றது. நிவாரன் 90, வெல்வெட் ஷாம்பூ ஆகியவற்றைத் தயாரிக்கும் சுஜாதா பயோடெக் நிறுவனத்தை நிறுவிய சி.கே.ராஜ்குமார், பிரபல சி.கே. வணிக குழுமத் தலைவரான சின்னி கிருஷ்ணனின் மகனாவார்.
மருத்துவரான இவர் நிவாரன் 90, நியாபக மறதிக்கு மருந்து உள்ளிட்ட பல்வேறு மருந்துகளை கண்டுபிடித்தவர்.அண்மையில் இவரும் இவரது ஊழியர்கள் குழுவும் சேர்ந்து கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.