Categories
சற்றுமுன் சினிமா

நடிகர் சூரியை மோசம் செய்த தயாரிப்பாளர்…!!!

நிலம் வாங்கித் தருவதாக நடிகர் சூரியை  மோசம் செய்ததற்காக திரைப்பட தயாரிப்பாளர் உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சூரி. கவுண்டமணி, செந்தில்,வடிவேல், விவேக் ஆகியோரை தொடர்ந்து  இவருக்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. கடந்த 2015-ஆம் ஆண்டு சூரி நடித்த வீர தீர சூரன் என்ற திரைப்படத்திற்கான சம்பளம் 40 லட்சம் ரூபாய் பாக்கி இருந்துள்ளது. அப்படத்தின் சம்பள பாக்கியை தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் தர மறுப்பதாக நடிகர் சூரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.மேலும் அவர்கள் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூபாய்  2.70  கோடி ஏமாற்றி உள்ளதாகவும் நடிகர் சூரி காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் சூரி கொடுத்த புகாரின் பெயரில் அடையாறு காவல் நிலையம் தற்போது விசாரணையை துவக்கியுள்ளது.

Categories

Tech |