Categories
தேசிய செய்திகள்

பொழுதுபோக்கு பூங்கா… இவர்கள் மட்டும் வரக்கூடாது … சுகாதாரத் துறை எச்சரிக்கை…!!!

நாடு முழுவதும் பொழுதுபோக்கு பூங்கா திறப்பதற்கான வழிகாட்டு முறைகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதிலும் வருகின்ற 15ஆம் தேதி முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே பொழுதுபோக்கு பூங்காக்களில் திறப்பதற்கு வழிகாட்டு முறைகளை சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளவை, “பொழுதுபோக்கு பூங்காவில் நீச்சல் குளம் செயல்படக் கூடாது.பொழுதுபோக்கு பூங்காவில் இருக்கின்ற உணவுக் கூடங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே உணவு அருந்த அனுமதி அளிக்க வேண்டும். அங்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்.

மேலும் 10 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது.பொழுதுபோக்கு பூங்காவில் குறிப்பிட்ட அளவிலான பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அதற்கான டிக்கெட்டை ஆன்லைனில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |