Categories
தேசிய செய்திகள்

75 சதவீத விமான சேவைகளுக்கு விரைவில் அனுமதி…!!

இந்தியாவால் 75 சதவீத விமான சேவைகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய்த் தொற்று பரவலுக்கு முன்பு வழங்கப்பட்ட விமான சேவைகளில் 60 சதவீதத்தை வழங்குவதற்கு விமான நிறுவனங்களுக்கு கடந்த மாதம் இரண்டாம் தேதி அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை அடுத்த பத்து நாட்களில் தொடர்ந்து அதிகரித்தால் 75% வரை விமான சேவைகளை வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று கூறினார்.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக அந்நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் சில நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் விமானங்கள் இயக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Categories

Tech |