Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அட்டகாசமான சுவையில்…நெத்திலி மீன் வறுவல்…!!

நெத்திலி மீன் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:

நெத்திலி மீன்                     – அரை கிலோ.
எலுமிச்சை சாறு               – 2 தேக்கரண்டி.
அரிசி மாவு                           – இரண்டு கைப்பிடி.
மிளகாய் தூள்                     – 3 டீஸ்பூன்.
தனியா தூள்                        – 3 டீஸ்பூன்
எண்ணெய்                           – போதுமான அளவு
உப்பு                                        – தேவைக்கேற்ப.
மைதா மாவு                        – ஒரு கைப்பிடி.
சோள மாவு                          – ஒரு கைப்பிடி.
கறிவேப்பிலை                   – இரண்டு கொத்து.

செய்முறை:

நெத்திலி மீனை சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் மிளகாய் தூள் 3 டீஸ்பூன், தனியா தூள்  3 டீஸ்பூன், எண்ணெய் போதுமான அளவு, உப்பு (தேவைக்கேற்ப),    மைதா மாவு ஒரு கைப்பிடி, சோள மாவு ஒரு கைப்பிடி, அரிசி மாவு இரண்டு கைப்பிடி, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். கலர் பொடி(தேவைப்பட்டால்)  சேர்த்துக் கொள்ளலாம்.

வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், கலவையை போட்டு பொரித்து எடுக்கவும். மேலும்  சுவையூட்ட  எலுமிச்சை சாறு விட்டால் நெத்திலி மீன் வறுவல் தயார்.

Categories

Tech |