தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பேசுபொருளாக மாறியுள்ளது எம்எல்ஏ பிரபு – சௌந்தர்யா காதல் திருமணம். கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு கல்லூரி மாணவி சௌந்தர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். மாணவியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், பிரபு தன் மகளை கடத்தி கட்டாயப்படுத்தி திருமணம் செய்து விட்டார் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் சௌந்தர்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று சவுந்தர்யா நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை, முழுமனதுடன் பிரபுவை திருமணம் செய்துள்ளேன். கணவருடன் செல்ல அனுமதி தாருங்கள் என்று சௌந்தர்யா கூறியதை அடுத்து கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு உடன் செல்ல மனைவி சவுந்தர்யாவுக்கு அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.