Categories
தேசிய செய்திகள்

போராட்டம் குறித்த தீர்ப்பு – பிரசாந்த் பூஷன் மீண்டும் சர்ச்சைக்‍ கருத்து

உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள திரு. பிரஷாந்த் பூஷன் தற்போது மீண்டும் போராட்டம் பற்றிய தீர்ப்புக்கு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான திரு. பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்னாள் தலைமை நீதிபதிகளை விமர்சித்ததற்காக அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டார். அதில் அவருக்கு தண்டனையாக 1ரூபாயை அபராதமாக செலுத்தும்படி உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் பொது இடங்களில் போராட்டம் நடத்துவது தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சாலைகள் போன்ற இடங்களில் கூடி போராட்டம் நடத்த சட்டப்படி அனுமதி கிடையாது என்றும் இதுபோன்ற போராட்டங்கள் நடக்கும் போது நீதிமன்றங்களின் உத்தரவுக்காக காத்திருக்காமல் போராட்டங்களை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது.

இந்து தீர்ப்புக்காக மீண்டும் உச்சநீதிமன்றத்தை விமர்சனம் செய்துள்ள திரு. பிரசாத் பூஷன் தனது பேஸ்புக் பதிவில் மும்பை உயர்நீதிமன்றம் ரியாத் சக்கரவர்த்திக்கு ஜாமீன் வழங்கும் போது போதை பொருள் கட்டுப்பாட்டு துறையினரை கண்டித்ததாக குறிப்பிட்டுள்ளார். அதே நாளில் உச்சநீதிமன்றம் போலீசாரால் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் கூட போராடும் உரிமையை கட்டுபடுத்தியுள்ளது. சுதந்திரத்தில் உச்சநீதிமன்றம் தொடர்ந்து சறுக்கிவருவதாகவும். அதேசமயம் உயர்நீதிமன்றங்கள் நீதியின் கொடியை உயர்த்திப் பிடிக்கின்றனர் எனவும் திரு. பிரஷாந்த் பூஷன் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |