இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 69,0000 தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,06,490 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ள போதிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 70,496 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 69,06,152 ஆக உயர்ந்துள்ளது. இதில் 8,93,592 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.
59,06,070 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 964 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மொத்த பலி எண்ணிக்கை 1,06,490 ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது,