Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மத்திய அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி…காரணம் என்ன???

தொல்லியல் துறை பட்டப்படிப்பில் தமிழ் மொழியை ஏன் முதலிலேயே சேர்க்கவில்லை என்று தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தொல்லியல் கல்லூரியில் முதுகலை  படிப்பிற்கான பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.பட்டப்படிப்பிற்கான தகுதி மொழியில் செம்மொழியான தமிழ்மொழி சேர்க்கப்படவில்லை. இதனையொட்டி தமிழகத்தில் உள்ள மூத்த தமிழறிஞர்கள்,அரசியல் தலைவர்கள் முதலானோர்  தங்கள்  அதிருப்தியினை வெளிப்படுத்தினர்.

இதனையடுத்து தமிழக முதல்வர் அவர்கள், தமிழ் மொழியின் தொன்மையை கருத்தில்கொண்டு செம்மொழியான தமிழ்மொழியினை தகுதி மொழியாக சேர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இதனையொட்டி தொல்லியல் துறை தமிழ் மொழியினை தகுதி மொழியாக சேர்த்து இன்று காலை புதிய அறிவிப்பாணை வெளியிட்டது.

இதனையொட்டி செம்மொழியான தமிழ்மொழி ஏன் முதலிலேயே தகுதி மொழியாக சேர்க்கப்படவில்லை? என தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் எதிர்ப்புகள் இல்லாவிட்டால் தமிழ்மொழி இணைக்கப்பட்டிருக்குமா?  என்றும் தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான அறிவிப்பை முதலில் வெளியிட்ட அதிகாரி யார் ? என்றும் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் அக்டோபர் 28-ம் தேதிக்குள் இக்கேள்விகளுக்கான சரியான விளக்கம் அளிக்கக்கோரியும் தொல்லியல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |