கடகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் செயல்களில் மிகுந்த அக்கறை காட்ட மாட்டீர்கள்.
அதிஷ்டத்தை நம்பாமல் சிறந்ததைச் செய்ய முயற்சி செய்யுங்கள். இன்று பணியில் திருப்திகரமான நிலை இருக்காது.
உங்களது சக பணியாளர்களுடன் திருப்திகரமான நிலை காணப்படாது. தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். இன்று காதலுக்கு ஏற்ற நாளல்ல. இன்று உங்களின் உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ள முடியாவிட்டால் பொறுமையை இழக்காதீர்கள், இனிவரும் நாட்கள் சிறந்த நாட்களாக இருக்கும் என்று நம்பலாம். நிதி நிலைமைக்கு இன்று சாதகமான சூழ்நிலை இல்லாத காரணத்தினால் உங்களிடமுள்ள பணத்தை வைத்து சமாளிக்க முடியும். இன்று ஆரோக்கியம் சுமாராக இருக்கும். இருமல் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்துக் காணப்படும். நண்பர்களிடத்தில் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. நீங்கள் அம்மன் வழிபாட்டை மேற்கொள்வது நல்லப்பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.