Categories
சற்றுமுன் சினிமா

கோவில் கோவிலாக சுற்றி வரும் நடிகர் சிம்பு… காரணம் என்ன…???

நேற்று திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் சிம்பு இன்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு  சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார்.

நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணமாக  வேண்டும் என்பதற்காக அவருடைய ரசிகர்கள் முருகன் கோவிலில் முட்டியிட்டபடி படிக்கட்டுகள் ஏறி சுவாமி தரிசனம் செய்தனர் . இதனையொட்டி நடிகர் சிம்பு நேற்று திருமலை திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனத்துக்காக வந்திருந்தார்.அங்கு ரசிகர்கள் யாரையும் சந்திக்காத சிம்பு முகத்தை மூடியபடி வேகமாக காரில் ஏறி விரைந்தார்.

இதுகுறித்து கேட்கப்பட்டபோது வருகின்ற நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் தனது புதிய படத்திற்கான கெட்டப்  வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக முகத்தை மறைத்தார்  என்று கூறப்பட்டது. இந்நிலையில் நடிகர் சிம்பு இன்று சுவாமி தரிசனத்துக்காக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்துள்ளார். இன்றும் முகத்தை முழுவதும் மூடியபடியே சிம்பு இருந்தார். கொரோனா காரணமாக அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில் சிம்பு ஏன் கோவில் கோவிலாக ஏறி இறங்குகிறார்? என அனைவர் மனதிலும் கேள்வி எழுந்துள்ளது.

Categories

Tech |