விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு சில அசௌகரியங்கள் காணப்படும். பதட்டத்தைக் கைவிடுங்கள். இலக்குகளை அடைவதற்கும், வெற்றியை பெறுவதற்கும் முறையாக திட்டமிட வேண்டியது அவசியமாகும்.
இன்று திருமண திட்டங்கள் பற்றிய உரையாடல்களை வேறொரு நாளுக்கு தள்ளிப்போடுவது நல்லது. இன்று காதலுக்கு ஏற்ற நாளல்ல. பணத்தை கவனமாக கையாள வேண்டும். பணயிழப்புக்கு வாய்ப்புள்ளது. இன்று உங்களின் தாயின் உடல்நிலைப்பற்றி வருத்தப்படுவீர்கள், அந்த வகையில் செலவுகளும் ஏற்படலாம். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்துக் காணப்படும். நண்பர்களிடத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது. இன்று நீங்கள் அம்மன் வழிபாட்டை மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: காவி நிறம்.