Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் விவசாயிகளுக்கு நலநிதி வாரியம் …!!

நாட்டிலேயே முதல்முறையாக கேரள மாநிலத்தில் விவசாயிகளுக்காக நலநிதி வாரியம் அமைக்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து கேரள அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 5 சென்ட் முதல் 50 ஏக்கர் வரையிலான நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் குத்தகைக்கு வேளாண்மை செய்யும் விவசாயிகள் இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக இணையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும். தோட்டக்கலை பயிர்கள், மருத்துவ பயிர்கள் பயிரிடுவோர் நர்சரி வைத்திருப்பவர்களும் இதில் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீன் வளர்ப்பு, அலங்கார மீன்கள் வளர்ப்பு, சிற்ப்பி, பட்டுப்புழு, கோழி, வாத்து, ஆடு, முயல் மற்றும் கால்நடைகள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களும் இந்த வாரியத்தில் சேர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நுழைவு கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அத்துடன் மாதந்தோறும் 100 வீதம் சந்தா செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தொகையை ஆண்டுக்கு ஒரு முறையோ, ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ, கூட செலுத்தலாம். அதே அளவு தொகையை அரசும் தனது பங்களிப்பாக செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நில வாரியம் சார்பில் விவசாயிகளுக்கு தனிநபர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், மருத்துவ உதவி, திருமண உதவி, பேறுகால உதவி, கல்வி உதவி, இறுதிச்சடங்கு உதவி தொகைகள் வழங்கப்படும். பெண் உறுப்பினர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் திருமண உதவித்தொகையும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாரியத்தின் தலைவராக பேராசிரியர் திரு. பி. ராஜேந்திரனை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |