கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் ஜாமீன் மனு விசாரணை வருகிற 13-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவின் மணப்பாட்டில் இருக்கின்ற அந்நாட்டு தூதரக முகவரிக்கு ஒரு பெட்டி வந்தது. அந்தப் பெட்டியில் 30 கிலோ தங்கம் இருப்பதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன் பிறகு அந்தப் பெட்டியை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அந்த கடத்தலுக்கு பின்னணியாக தூதரகத்தில் பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ் என்பவர் இருப்பது தெரியவந்தது.
அதன் பிறகு அவரை கைது செய்த காவல்துறையினர், அவர் தற்போது வரை 100 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தி இருக்கலாம் என்று சந்தேகம் கொண்டனர். அந்த வழக்கில் 20 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர். தற்போது ஸ்வப்னா சுரேஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக சப்னா சுரேஷ் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு மீதான விசாரணையை வருகின்ற 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.