Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்…!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திடீரென்று ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து சரக்கு வாகனத்தால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சங்கரன்கோவில் நகராட்சி சார்பில் மேல ரத வீதி பகுதியில் குடிநீர் குழாய் இணைப்பு பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு கடந்த 10 நாட்களாக பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சங்கரன்கோவிலில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தோண்டப்பட்ட பள்ளம் முழுவதும் மழைநீர் தேங்கி மண்சரிவு ஏற்பட்ட திடீர் பள்ளம் உருவாகியது.

அப்போது அவ்வழியாக உத்தரப் பிரதேசத்தில் இருந்து வந்த சரக்கு வாகனம் அந்தப் பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன்கோவில் நகர போக்குவரத்து காவல் துறையினர் மீட்பு குழு உதவியுடன் சரக்கு வாகனத்தை பள்ளத்தில் இருந்து மீட்டனர். இதனால் அந்த பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Categories

Tech |