Categories
மாநில செய்திகள்

ரயில் கிளம்புவதற்கு 5 நிமிடத்திற்கு முன் வரை டிக்கெட் …!!

நாளை முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பு வரை டிக்கெட் பெறலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக ரயில் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு முன்பதிவு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு பழைய நடைமுறையே பின்பற்றப்படும்  என ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பு வரை டிக்கெட் பெறலாம் என ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில்வேக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் முடிந்த அளவுக்கு அதிக்கம் பேர் புக்கிங் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. டிக்கெட் கட்டணத்தை திரும்பப்பெறும் விதிமுறைகளின்படி இந்த காலகட்டத்தில் டிக்கெட்டுகளையும் ரத்து செய்யவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |