Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவருக்கு நேர்ந்த சோகம்…!!

திருவாரூர் மாவட்டம் இறவாஞ்செரி அருகே மணவாளநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இரவாஞ்சேரி  அருகே மணவாளநல்லூர் ஊராட்சி   ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் திமுகவை சேர்ந்த இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்பகை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மணவாளநல்லூர் கடைவீதியில் கணேசன் வந்தபோது அந்த வலியே வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர்.

பலத்த காயமடைந்த கணேசன் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து இரவாஞ்சேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |