அருப்புக்கோட்டை அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து லாரி ஓட்டுநர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ரெட்டியார்பட்டி லட்சுமி புரத்தை சேர்ந்தவர் லக்ஷ்மண பெருமாள். இவரின் 4 வயது மகள் தினமும் அக்கம் பக்கத்து வீட்டில் விளையாட செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் விளையாட சென்ற அந்த சிறுமிக்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்த லாரி ஓட்டுநர் கதிர்வேல்சாமி பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து லட்சுமண பெருமாள் அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் கதிர்வேல் சாமியை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.