Categories
அரசியல்

“புரிதல் இல்லாத பிரதமர்” ராகுலின் கிண்டல்…. பதிலடி கொடுத்த பாஜகவினர்…!!

பிரதமர் மோடியின் யோசனையை கிண்டல் செய்த ராகுல் காந்திக்கு பாஜகவினர் பதிலடி கொடுத்துள்ளனர்

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பிரதமர் மோடி காற்றாலை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுடன் குடிநீர். ஆக்சிஜன் போன்றவற்றின் உற்பத்தி குறித்து மேற்கொண்ட உரையாடல் வீடியோவை பதிவிட்டார். மேலும் நமது பிரதமர் புரிதல் இல்லாதவர் என்றால் ஆபத்து இல்லை. ஆனால் பிரதமரை சுற்றி இருப்பவர்களும் அதை எடுத்துச் செல்லும் துணிவு இல்லாதவர்கள் என்பதுதான் மிகவும் ஆபத்தானது என கிண்டலுடன் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து பாஜக தரப்பில் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. ராகுல் காந்தியின் கருத்துக்கு பதில் அளித்த மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறுகையில், “ராகுல் காந்தியை சுற்றியிருக்கும் யாருக்கும் அவர் புரிதல் இல்லாதவர் என்பதை சொல்வதற்கான துணிச்சல் இல்லை. பிரதமரின் அற்புத யோசனையை காற்றாலை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஏற்றுக்கொள்ளும்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேலி செய்து வருகிறார்” என தெரிவித்துள்ளார். அதோடு காற்றாலைகள் சுத்தமான குடிநீரை உற்பத்தி செய்வதாக வெளியான செய்தியையும் அவர் இணைத்திருந்தார்.

பாஜகவின் செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா கூறுகையில் மெல்லிய காற்றில் இருந்து சுத்தமான குடிநீர் தயாரிக்கப்படுவதாக செய்திகள் வெளியானதை படிக்குமாறு அறிவுறுத்திய தோடு இது போன்ற சிக்கலான விஷயம் ராகுல்காந்திக்கு புரியாது என்றும் கூறியுள்ளார். பாஜகவின் சமூகவலைத்தள துறைத் தலைவர் அமித் மாளவியா கூறுகையில், “அறியாமைக்கு மருத்துவம் கிடையாது. அறியா குழந்தையான ராகுல் உலகத்தில் இருக்கும் அனைவரும் தன்னைப் போன்று அறியாமையுடன் இருப்பார்கள் என்று நினைக்கின்றார்” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |