பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களுக்கு அரசு பணிகளில் விண்ணப்பிக்க வயது வரம்பை அதிகரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு வயதுவரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், “குறிப்பிட்ட சில அரசு பணிகளுக்கு நேரடியாக பணி நியமனம் செய்யப்படுகிறது.
இதில் சேர விரும்புபவர்களுக்கு குறைந்தபட்சமாக எஸ்எஸ்எல்சி முடித்திருக்க வேண்டும். அதோடு இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் போன்றவர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 30 ஆக இருந்தது. ஆனால் தற்போது அவர்களுக்கான வயது வரம்பை உயர்த்தி 32 ஆக மாற்ற ஆணையிடப்பட்டுள்ளது.