Categories
கிரிக்கெட் விளையாட்டு

“CSK தோல்வி” தோனி மகள் என்ன செய்வார்…? 5 வயது சிறுமி பற்றி கமெண்ட்… கொந்தளித்த இணையவாசிகள்…!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றதால் தோனியின் மகளை ஆபாசமாக பேசி கமெண்ட் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்த முறை ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவி வருகின்றது. இதனால் ரசிகர்கள் பலரும் வேதனையிலும் கோபத்திலும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசியாக புதன்கிழமை அன்று விளையாடிய போது 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதனால் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் கோபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியின் மகள் பற்றி ஆபாசமாக கமெண்ட் ஒன்றை செய்திருக்கிறார்.

ஐந்து வயதே ஆன தோனியின் மகள் குறித்து பாலியல் ரீதியாக பகிர முடியாத அளவிற்கு கமெண்ட் செய்துள்ளார். இதனைப் பார்த்த இணையவாசிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விளையாட்டு வீரர் சரியாக விளையாடாவிட்டால் அவர் வீட்டில் இருக்கும் பெண்களை தவறாக பேசுவதும் சித்தரிப்பதும் தற்போது வாடிக்கையாகிவிட்டது. இதுபோன்ற செயல்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கும் பட்சத்தில் இது தொடர்வதை தடுக்க முடியும் என்றும் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |