Categories
தேனி மாவட்ட செய்திகள்

மதுபோதையில் வந்த கணவர்… சண்டை போட்ட மனைவி… கணவன் எடுத்த விபரீத முடிவு… இறுதியில் நடந்த சோகம்…!!!

தேனி மாவட்டத்தில் மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவர் மகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே இருக்கின்ற பூமலைகுண்டு வடக்கு தெருவில் 34 வயதுடைய ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். லாரி டிரைவராக இருக்கும் அவர் தனது மனைவி, ஆறு வயதுடைய பூவிகா, நான்கு வயதுடைய ரித்திகா ஆகிய இரு மகள்களுடன் வசித்து வருகிறார். நேற்று மது அருந்திவிட்டு ராஜ்குமார் தனது வீட்டுக்கு வந்துள்ளார். அதனால் அவரின் மனைவிக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தகராறு முற்றிய காரணத்தால் மனமுடைந்த ராஜ்குமார் தனது மனைவி மற்றும் மூத்த மகளை வீட்டுக்கு வெளியே தள்ளிவிட்டு கதவை உள்பக்கமாக பூட்டியுள்ளார்.

அதன் பிறகு தனது இளைய மகள் ரித்திகாவுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்துள்ளார். அதனைக் கண்டு ஜெயப்பிரியா கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்தனர். வீட்டில் மயங்கி கிடந்த ராஜ்குமார் மற்றும் ரித்திகா ஆகிய இருவரையும் மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

 

Categories

Tech |