Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் பள்ளிகள் திறப்பு… வெளியாகும் வதந்திகள்… உண்மை என்ன?… எடியூரப்பா விளக்கம்…!!!

கர்நாடகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி வெளியாகும் வதந்திகளை குழந்தைகளின் பெற்றோர்கள் எவரும் நம்ப வேண்டாம் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் வருகின்ற 15ஆம் தேதிக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில் பள்ளிகள் திறப்பு பற்றி எழுந்துள்ள தகவல் குழந்தைகளின் பெற்றோர் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக அரசு தற்போது வரை பள்ளிகள் திறப்பது குறித்து எந்த ஒரு தெளிவான தகவலையும் வெளியிடவில்லை. அதனால் பெற்றோர்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று குழந்தைகளின் பெற்றோருக்கு முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “கர்நாடக மாநிலத்தில் அருணா பரவலை தடுக்கும் நோக்கத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இது பற்றி ஊடகங்கள் பல்வேறு விவாதங்களை நடத்தி வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர்களும் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மற்றும் எதிர்கால நலனை கருதி, அனைத்து கட்சிகளின் தலைவர்கள்,கல்வித்துறை நிபுணர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் அனைவரையும் கூட்டி ஆலோசனை நடத்தப்படும். அதன் பிறகுதான் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு தெளிவான முடிவும் எடுக்கப்படும்.அதுவரையில் பள்ளிகள் திறப்பது பற்றி வெளியாகும் வதந்திகளை பெற்றோர்கள் எவரும் நம்ப வேண்டாம்”என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |