Categories
கடலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: பட்டியலின் ஊராட்சி மன்றத் தலைவருக்கு அவமரியாதை …!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவர் அவமதிக்கப்பட்ட தாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவராக ராஜேஸ்வரியும், துணைத் தலைவராக மோகனும் இருந்துள்ளார். இந்நிலையில் துணைத் தலைவர் மோகன் ஊராட்சி மன்ற தலைவரை தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்திற்காக அவரை தரையில் அமர்த்தி  கூட்டம் நடத்தியதற்காக சமூக வலைதளங்களில் நேற்று ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் என்பது 17.7. 2020 அன்று நடந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த புகார் வந்ததும் காவல்துறை உடனடியாக அவர்களை அழைத்து புவனகிரி காவல் நிலையத்தில் அமரவைத்து தற்போது விசாரணை தொடங்கி உள்ளார்கள். விசாரணையில் நடந்த சம்பவங்கள் உண்மைதான். ஆனால் இந்த சம்பவம் நடந்து இதுவரை வெளிவராமல் தற்போது வெளி வர காரணம் என்ன ? என்று காவல்துறை விசாரணை மேற்கொண்டு இருக்கிறது. அதே சமயத்தில் கடலூர் மாவட்ட நிர்வாகமும் இது சம்பந்தமாக விசாரணையை மேற்கொண்டு வருவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |