Categories
உலக செய்திகள்

ஐந்து ஆண்டுகளாக இந்தியாதான் முதலிடம்… எதில் தெரியுமா???

உலகிலேயே அதிக அளவில் சல்பர் டை ஆக்சைடை உமிழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 5 ஆண்டுகளாக முன்னிலை வகிக்கின்றது.

எரி சக்தி & காற்று ஆராய்ச்சி மையம் மற்றும் க்ரீன் பீஸ் நடத்திய ஆய்வின் பெயரில் தயாரித்த இந்த ஆண்டிற்கான அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.இதில் இந்தியாவின் சல்பர் டை ஆக்சைடின் உமிழ்வானது 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2019 ஆம் ஆண்டில் 6% குறைந்துள்ளது என கூறுகின்றது. இந்த உமிழ்வானது கடந்த நான்காண்டுகளை  காட்டிலும் மிகக் குறைவு எனினும் இந்தியாதான்  இந்த பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றது.

இதை தொடர்ந்து ரஷ்யா இரண்டாமிடத்தையும்,சீனா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.காற்றில் விஷத்தன்மையை ஏற்படுத்தவல்ல இந்த சல்பர் டை ஆக்சைடு மனிதர்களுக்கு இதய நோய், பக்கவாதம் மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய்களை தோற்றுவிக்கிறது.மேலும் இது சுவாச மண்டலத்தை கடுமையாக பாதிக்க வல்லது. உலகிலேயே  சல்பர் டை ஆக்சைடை  வெளியிடும் ஹாட்ஸ்பாட் ஆக சென்னை மற்றும் நெய்வேலிதான்  இருக்கின்றது என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

Categories

Tech |