Categories
கிரிக்கெட்

தோனியின் ஐந்து வயது மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்…!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வருவதன் காரணமாக தோனியின் 5 வயது மகளுக்கு  சமூக வலைதளங்களில் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டி வருகின்றது. முதல் போட்டியில் தோல்வியை தழுவிய சென்னை அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.பின்பு பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு வெற்றியை பதிவு செய்த போதிலும் மீண்டும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது.இந்த ஆட்டங்களில் பேட்ஸ் மேன்கள் மோசமாக ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக தெரிகின்றது.

மேலும் தோனியும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.இதையொட்டி சமூகவலைதளங்களில் விஷமிகள் சிலர் தோனி மற்றும் அவரது மகளின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மிரட்டல் விடுத்துள்ளனர்.மேலும் தோனி ஒழுங்காக விளையாடவில்லை என்றால்  தோனியின் 5 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவோம் என மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பதிவிட்டுள்ளனர்.

Categories

Tech |