வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக, திமுக கூட்டணியிலேயே நிலைத்திருக்குமென மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் வருகிற மே மாதம் நடக்கவிருக்கும் நிலையில் கட்சிகளின் கூட்டணி நிலவரம் தொடர்பான பரபரப்பு பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் தற்போது துவங்கியுள்ளன.இதையடுத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வருகின்ற சட்டபேரவை தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட போவதாக தகவல் வெளியானது.இதை மறுத்துள்ள வைகோ வரப்போகின்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்குமென்றும் வரப்போகிற தேர்தல் அதிமுகவிற்கு மரண அடியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் வருகின்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும் என்றும் கூறியுள்ளார். மேலும் வருகின்ற தேர்தல் முடிவானது அதிமுகவிற்கு பெருத்த அடியாக அமையும் என்றும் முகஸ்டாலின் முதல்வராவது உறுதி என்றும் சூளுரைத்துள்ளார். மேலும் “நான் பதவிகளுக்காக வாழவில்லை லட்சியத்திற்காக வாழ்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.