Categories
தேசிய செய்திகள்

கணவரிடம் 10 வருசமா பேச விடல….. மாமியாரை வெளுத்து வாங்கிய மருமகள்….!!

மாமியாரை இழுத்துப்போட்டு மருமகள் கடுமையாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஹைதராபாத்தில் உள்ள மல்லேபள்ளி பகுதியை சேர்ந்தவர் தனிஷிகா சுல்தானா. இவருக்கும் அவரது மருமகள் உஜ்மாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது தாயுடன் சேர்ந்து சுல்தானாவை உஜ்மா கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரித்ததில் சுல்தானாவின் மகன் சவுதி அரேபியாவில் பத்து வருடங்களாக பணிபுரிந்து வருகின்றார்.

ஆனால் உஜ்மாவை தனது கணவருடன் பேசுவதற்கு மாமியார் அனுமதிக்கவில்லை. அதுமட்டுமன்றி மேல் வீட்டில் வசித்து வரும் தனிஷிகா கீழ் வீட்டில் இருக்கும் உஜ்மாவிற்கு குடிநீர் கொடுக்க மறுத்துள்ளார் என உஜ்மா தனது தரப்பு நியாயத்தை கூறியிருக்கிறார். இதேபோன்று தனிஷிகா தனது மருமகள் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் இருவரிடமும் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |