பழைய காதலை மறைக்க தியானம் செய்தால் போதும் என்று கூறி இளம்பெண்ணிடம் கோவில் அர்ச்சகர் பாலியல் தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
போரூர் அடுத்து இருக்கும் ஐயப்பன்தாங்கல்பகுதியை சேர்ந்தவர் கோவில் அர்ச்சகரான சந்திரமவுலி. இவர் மீது இளம்பெண் ஒருவர் பூந்தமல்லி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் “நான் ஒருவரை மூன்று வருடங்களுக்கு முன்பு காதலித்தேன். அந்த காதலை மறப்பதற்கு தியானம் செய்தால் போதும் என்று அர்ச்சகர் சந்திரமவுலி தனி அறைக்கு என்னை அழைத்துச் சென்றார்.
அங்கு தியானம் செய்துகொண்டிருந்த சமயம் அவர் என்னிடம் தவறாக நடந்தார். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். புகாரை ஏற்ற பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து கோவில் அர்ச்சகர் சந்திரமௌலியை கைது செய்ததோடு சிறையில் அடைத்தனர்.