Categories
மாநில செய்திகள்

மக்களுக்கு எதிராக செயல்படுவதை நிறுத்த வேண்டும் – டிடிவி தினகரன்

விதிமுறைகளுக்கு மாறாக பழனிச்சாமி அரசு நடைமுறைபடுத்த நினைத்த 2,650 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பாராட்டியுள்ள அம்மாமக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் மக்களுக்கு எதிராக செயல்படுவதை இனியாவது பழனிச்சாமி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

அம்மாமக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கிராம சாலைகளை மேம்படுத்துவதாக கூறி பழனிச்சாமி அரசு விதிகளுக்கு மாறாக நடைமுறைப்படுத்த நினைத்த சுமார் 2,650 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளார். இதனை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொண்டு ஊராட்சி மன்றங்களின் மூலமாக கிராம சாலை பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். கனிமவளம், உள்ளாட்சி, உயர்கல்வி போன்ற துறைகளிலும் நடந்த பல குளறுபடிகளுக்கு நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஏற்கனவே பழனிச்சாமி அரசு ஆளாகி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக அரியர் தேர்வுகளில் பாஸ் ஆனதாக அறிவித்தது. வெளிமாநிலத்தவர் தமிழக அரசின் பணிகளில் அமர்த்தப்பட்டது போன்ற விஷயங்களில் தனது தவறான முடிவுகளுக்காக கடும் கண்டனத்திற்கு இந்த அரசு ஆளானதே சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு மக்களுக்கு எதிராக செயல்படுவதை இனியாவது பழனிசாமி அரசு நிறுத்திட வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும் திரு. டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |