வங்கி கடன் தவணைகள் ஒத்திவைப்பு காலத்தை மேலும் ஆறு மாதத்திற்கு நீட்டிப்பது சாத்தியமில்லை என ரிசர்வ் வங்கி சுப்ரீம் கோர்ட்டில் கூறியுள்ளது
கொரோனா காலத்தில் வட்டிக்கு வட்டி விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் பிரமாண பத்திரத்தை ரிசர்வ் வங்கி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் வங்கி கடன் தவணைகளை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டி வைப்பது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளது. வங்கி கடன் தவணைகள் ஒத்திவைப்பு காலத்தை மேலும் நீட்டிப்பது, கடனை திருப்பி செலுத்தும் முறை பாதிப்பது மட்டுமல்லாமல் கடன் வழங்கும் முறையை பலவீனப்படுத்திவிடும்.
மேலும் வாடிக்கையாளர்கள் மீதான சுமையை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, வட்டி மீதான வட்டி தள்ளுபடி என்ற மத்திய அரசின் திட்டம்,மக்களின் பிரச்சனையை தீர்க்க தவறிவிட்டதாக சுப்ரீம் கோர்ட் கூறியது. ரியல் எஸ்டேட் மற்றும் மின் துறையின் கவலைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவும், புதிதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.