Categories
உலக செய்திகள் சற்றுமுன்

சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம்… இரண்டாம் கட்ட பட்டியலை கைப்பற்றியது இந்தியா…!!!

கருப்பு பணக் கடத்தலை தடுக்கும் விதத்தில் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களின் விவரங்களை இரண்டாம் கட்டமாக கைப்பற்றியுள்ளது இந்தியா.

கருப்பு பணத்தை கைப்பற்றுவதற்காக மத்திய அரசின் சார்பில் சில ஆண்டுகளாக பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது, 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது ஆகியவை இதில் முக்கியமானவை ஆகும். இந்நிலையில் கருப்பு பணம் பதுக்குவதை தடுக்கும் விதமாக, சுவிட்சர்லாந்து வங்கிகளில் விதிமுறை மீறி பணம் வைத்துள்ளவர்களின்  விவரங்களை வெளியிட இந்தியா மற்றும் சுவிச்சர்லாந்து இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கட்ட வங்கிக் கணக்கு விவரங்களை இந்தியாவிடம் வழங்கியது சுவிச்சர்லாந்து. இதனை அடுத்து  இரண்டாம் கட்ட கணக்கு விவரங்கள் தற்போது மத்திய அரசிற்கு வழங்கப்பட்டுள்ளன.இதில் இந்தியா உட்பட 86 நாடுகளை சேர்ந்தவர்களின் 31 லட்சம் கணக்கு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.இந்த கருப்பு பணகடத்தலில் இந்தியா குடிமகன்களே அதிகம் இடம் பெற்றுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |