மேஷம் ராசி அன்பர்களே..!
தாயின் அன்பும் ஆதரவும் இன்று பலமாக இருக்கும். சிறு செயலையும் மிகவும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபார தொடர்பு வளம் பெறும். பணவரவும் நன்மையைக் கொடுக்கும்.
கூட்டுத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலைச்சுமை இருக்கும். செலவுகள் அதிகமாக காணப்படும். செலவைக் குறைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளுங்கள். தேவையான பணவுதவி சற்று தாமதமாகத்தான் கிடைக்கும். மற்றவர்களிடமிருந்த மனவருத்தம் நீங்கும். நண்பர்களால் நற்பயன் உண்டாகும். இன்று விவேகம் அதிகமாக காணப்படும். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கை வெளிப்படுத்துங்கள். பேசும்பொழுது கவனமாக பேசுங்கள். மாணவ மாணவியர்கள் பொருத்தவரை இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்துக் காணப்படும். இன்று நீங்கள் சூரியபகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.