ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று அனைவரிடமும் எதார்த்தமாக பழகுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்திலுள்ள அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். முக்கிய செலவிற்காக இன்று கடன் பெறுவீர்கள்.
வியாபாரம் சிறப்பாக நடக்கும். எதிர்பார்த்த நிதி உதவியும் கிடைக்க பெறுவீர்கள். காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். குடும்பத்தில் சிக்கல்கள் நீங்கும். இன்று பணவரவு ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியான பொழுதினை கழிப்பீர்கள். மாணவ மாணவியர்களுக்கு இன்று நல்லபலன் காணப்படும். விளையாடும் போது கவனம் மேற்கொள்ளவேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாகவே இருக்கும். இன்று நீங்கள் சூரிய பகவான் வழிபாட்டிலும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 9.
அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் நிறம்.