கட்டுக்கட்டாய் பணம் அடங்கிய ஐந்து சூட்கேஸ்களுடன் இளம்பெண் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பிரிட்டனை சேர்ந்த தாரா ஹான்லான் என்ற பெண் ஹீத்ரா விமான நிலையத்தில் வைத்து ஐந்து சூட்கேஸ்களுடன் தடுத்து நிறுத்தப்பட்டார். விமானநிலையத்தில் அவரது சூட்கேஸ்களை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் ஏராளமான பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சுமார் இரண்டு மில்லியன் பவுண்டுகள் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. இந்த வருடம் பாதுகாப்பு படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் தொகையான சட்டவிரோத பணம் இது தான் என கூறப்படுகின்றது.
சட்டத்திற்கு விரோதமாக பணி பணப்பரிவர்த்தனை செய்ததாக தாரா மீது வழக்குப் பதியப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வரும் நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை சிறையில் அடைக்கப்படுவார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 14 வருடம் சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.