தனது காலை சுற்றிய மலை பாம்பிடம் இருந்து ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் போராடி தப்பித்தது பாராட்டுகளைப் பெற்று வருகிறது
கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் ஊர்வா என்ற கிராமத்தை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு சிறுவன் சங்கல்ப் ஜி பாய். புதன்கிழமை அன்று சிறுவன் தனது வீட்டின் அருகே இருந்த கோயிலுக்கு சென்று இருந்தார். அப்போது கழிவுநீர் குழாயில் இருந்து மலைப்பாம்பு ஒன்று வெளியே வந்து சிறுவனின் காலைக் கவ்வி பிடித்துள்ளது. அதிர்ச்சியடைந்த சிறுவன் உதவிக்கு சத்தமிட்டு அழைத்துள்ளான். ஆனால் அப்பகுதியில் யாரும் இல்லாததால் தனியாக சிறுவன் சிக்கியுள்ளன்.
இதனால் நம்மை நாம் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற மன தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மலைப்பாம்புடன் தன்னால் முடிந்த அளவு போராடி பாம்பை தாக்கியுள்ளான். இதனால் பின்வாங்கிய பாம்பு சிறுவனின் காலை விட்டுவிட்டு கழிவுநீர் குழாய்க்குள் மறுபடி புகுந்துவிட்டது. ஊருக்குள் காயத்துடன் வந்த சிறுவன் கிராம மக்களிடம் தன்னை பாம்பு சுற்றி வளைத்தது குறித்து தெரிவித்தான்.
இதனை தொடர்ந்து தன்னார்வலர் ஒருவர் மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். தற்போது உயிரியல் பூங்காவில் அந்த பாம்பு விடப்பட்டுள்ளது பாம்பிடம் கடிபட்ட மகன் தற்போது குணமடைந்து வருவதாக சிறுவனின் தந்தையான கோபாலகிருஷ்ணன பாய் தெரிவித்துள்ளார். ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவனின் துணிச்சலான செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.