Categories
தேசிய செய்திகள்

“ஆன்லைனில் செல்போன்” 9,500 ரூபாய்க்கு சோப்புக்கட்டி….. போலீஸ் விசாரணை…!!

ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்தவருக்கு சோப்பு கட்டி டெலிவரி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மும்பையை சேர்ந்த அமோல் என்பவர் ஆன்லைனில் செல்போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இதனையடுத்து 9,500 ரூபாய் மதிப்புள்ள அந்த செல்போனை கொரியர் நிறுவனம் அமோல் வீட்டில் டெலிவரி செய்துள்ளது. பாக்ஸை வாங்கிய அமோல் ஆவலுடன் திறந்து பார்த்தால் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

பாக்ஸின் உள்ளே அவர் ஆர்டர் செய்த செல்போனுக்கு பதிலாக சோப்புக் கட்டி இருந்துள்ளது. இதனால் கோபம் கொண்ட அமோல் காவல் நிலையத்தில் கொரியர் நிறுவனத்தின் மீதும் டெலிவரி பாய் மீதும் புகார் கொடுத்தார். அதனை ஏற்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Categories

Tech |