Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என் ஆசை இது…. ஊரடங்கில் அசத்தும் மாணவி….. குவியும் வாழ்த்துக்கள்….!!

கல்லூரி மாணவி ஊரடங்கு காலத்தில் தனக்குப் பிடித்த செயலை செய்து சமூகவலைதளத்தில் பிரபலமாகியுள்ளார்

மதுரையை சேர்ந்த ஜெனிஃபர் என்ற கல்லூரி மாணவி ஊரடங்கு நாட்களில் தனக்கு பிடித்தமானதை செய்து பிரபலமாகியுள்ளார். தூக்கி வீசப்படும் பாட்டில்களை எடுத்து அதில் கைவினைப் பொருட்களை தயார் செய்கிறார் ஜெனிஃபர். இதுதான் தனது சிறுவயது ஆசை என்று கூறும் அவர் தற்போது தான் இதனை செய்வதற்கு நேரம் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தூக்கி எறியப்படும் பழைய பாட்டில்களை எடுத்து அதனை சுத்தப்படுத்தி பெயிண்ட் மற்றும் டிஸ்யுகளால் அழகாக மாற்றுகின்றார். இந்த 2020 ஆம் வருடம் தனது படைப்புகளை நினைவுகூறும் என அவர் கூறுகின்றார். அவர் செய்யும் கைவினைப்பொருட்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி இணையவாசிகள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |