நடிகர் சூரி தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையான ரமேஸ் குடவாலாவிடம் திருப்பி கேட்டபோது அவர் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டதாகவும் அதனால் நடிகர் சூரி அழுததாகவும் கூறப்படுகின்றது
கடந்த 2015-ஆம் ஆண்டு சூரி நடித்த ‘வீர தீர சூரன்’ என்ற திரைப்படத்திற்கான 40 லட்சம் சம்பள பாக்கியை தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா ஆகியோர் தர மறுத்ததாக நடிகர் சூரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.மேலும் அவர்கள் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூபாய் 2.70 கோடி பணம் வாங்கி ஏமாற்றியதாகவும் தெரிகின்றது.மேலும் பணத்தை திருப்பித் தருவதாக கூறி ஐந்து ஆண்டுகளாக என்னை அழைக்கழித்து வருகின்றனர் என நடிகர் சூரி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனிடம் நடிகர் சூரி பணத்தை கேட்டபோது அவரையும், அவரது குடும்பத்தையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாக தெரிகின்றது. அடுத்ததாக பணத்தை கேட்பதற்காக நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையான ரமேஸ் வீட்டிற்கு சென்றபோது அவர் பணத்தை திருப்பி கொடுக்க முடியாது எனக் கூறி வீட்டை விட்டு விரட்டியதாக தெரிகின்றது. இதனால் சூரி அழுது கொண்டே வெளியே வந்ததாகவும் தகவல் கசிந்துள்ளது. அதன் பிறகே நடிகர் சூரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாக தெரியவந்துள்ளது. நடிகர் சூரி கொடுத்த புகாரின் பெயரில் தற்போது போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.