Categories
அரசியல்

ராம்விலாஸ் பஸ்வான்… இறுதி ஊர்வலத்தில் திரண்ட… லட்சக்கணக்கான தொண்டர்கள்…!!!

மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

மத்திய மந்திரி மற்றும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,பிரதமர் மோடி மற்றும் பல அரசியல் கட்சியின் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.அதன் பிறகு அவரின் உடல் விமானம் மூலமாக அவரின் சொந்த மாநிலமான பிகாரில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பாட்னாவில் இருக்கின்ற அவரின் வீட்டில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் அவரின் உடல் ஜனார்த்தன் காட் பகுதிக்கு அடக்கம் செய்ய ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.அந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அதன்பிறகு முழு அரசு மரியாதையுடன் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.

Categories

Tech |