பேஸ்புக் காதலனை பார்க்க கேரளாவிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்த பள்ளி மாணவியை காரில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே முக்கம் பகுதியைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி ஃபேஸ்புக் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பகுதியில் உள்ள அண்ணா நகரைச் சேர்ந்த தரணி என்பவருடன் பேசி வந்துள்ளார். நாளடைவில் இருவரும் காதலிக்க ஆரம்பித்த நிலையில் தரணியை பார்ப்பதற்காக தனது நண்பர் விபின் ராஜ் காரில் சிறுமி கிருஷ்ணகிரி வந்துள்ளார். அப்போது தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை விபின் ராஜ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனிடையே மாணவியை காணாததால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர் செல்போன் டவர் சிக்னல் மூலம் சிறுமியை கண்டுபிடித்த போலீசார் காதலன் தரணியை கைது செய்தனர். மேலும் பாலியல் வன்கொடுமை செய்த விபின் ராஜ், அகித் ராஜ், ஜோபின் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.