Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை – உள்துறை அமைச்சகம் கடிதம்

பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை வேதனை தெரிவித்ததுடன் இதனை தடுக்க இந்தியா உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. இந்நிலையில் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. உரிய சட்டப் பிரிவுகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்.

வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது FIR பதிவு செய்து தடையங்களை சேகரிக்கலாம் என்றும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவோரின் தகவல்களை பாதுகாத்துவைக்க வேண்டும் என்றும் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறுகள் நடப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்குகளை சரியான நேரத்தில் முடித்து குற்றவாளிக்கு உரிய நேரத்தில் தண்டனை பெற்றுதர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |