Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பட்டியலினத்தை சேர்ந்த ஊராட்சித் தலைவர்  அவமதிக்கப்பட்ட விவகாரம்… ஊராட்சி செயலர் சிந்துஜா கைது…!!!

கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் ஊராட்சி செயலர் சிந்துஜா புவனகிரி காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டுள்ளார் .

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகில் உள்ள தெற்குதிட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி. கடந்த ஜூன் 17ஆம் தேதி நடந்த ஊராட்சி மன்ற கூட்டத்தின்போது ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் தற்போது தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  ஊராட்சி மன்ற கூட்டத்தின் போது ராஜேஸ்வரி கீழே தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளிவந்ததை அடுத்து இச்சம்பவம் மக்களின் கவனத்திற்கு வந்தது.

இதையடுத்து புவனகிரி காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் இவ்வழக்கில் விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் ஊராட்சி மன்ற செயலர் சிந்துஜா வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புவனகிரி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் மோகன்ராஜ் தலைமறைவாகி உள்ளார் அவரை போலீசார் தேடி வருகின்றனர.

Categories

Tech |