Categories
அரசியல் தேசிய செய்திகள்

ராணுவ வீரர்களுக்கு சாதாரண வண்டி… பிரதமருக்கு ரூபாய் 8000 கோடியில் விமானமா?  ராகுல் காந்தி காட்டம்…!!!

ராணுவ வீரர்கள் புல்லட் ப்ரூப் வாகனம் இல்லாமல் சாதாரண வண்டியில் பயணிக்கும்போது பிரதமருக்கு ரூபாய் 8000 கோடியில் விமானம் தேவையா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுல் காந்தி இன்று தனது ட்விட்டர் பதிவில் ராணுவ வீரர்கள் இருவர் பேசிக் கொண்டிருப்பது போல வீடியோ ஒன்றினை வெளியிட்டார்.அதில் ஒரு ராணுவ வீரர் மற்றொரு ராணுவ வீரருடன் நாம் புல்லட் ப்ரூப் இல்லாத சாதாரண வாகனத்தில் பயணிக்கிறோம். வேறு சிலர் புல்லட் ப்ரூப் வாகனங்களில் பயணிக்கின்றனர். நாம் நம் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறோம் என்று ஹிந்தியில் பேசிக்கொள்கின்றனர்.இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ராகுல் காந்தி ராணுவ வீரர்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை செய்து கொடுக்காமல் பிரதமருக்கு ரூபாய் 8400 கோடியில் விமானம் வாங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் நம் ராணுவ வீரர்கள் இந்திய சீன எல்லையில் குளிரில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கான அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்வதே அரசின் கடமை என கூறியுள்ளார்.

Categories

Tech |